மகளிா் கல்லூரியில் கலை விழா
By DIN | Published On : 18th March 2022 12:00 AM | Last Updated : 18th March 2022 12:00 AM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் கலைநாள் விழா, வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் சி. அமுதா முன்னிலை வகித்தாா். விழாவையொட்டி, மாணவிகளுக்கு பரதம், தமிழ் கவிதை, தமிழ் பாடல், மேற்கத்திய தனி நடனம், குழு நடனம், ஆங்கிலப் பேச்சு, ஆடை அலங்காரம், நாட்டுப்புற தனி நடனம், குழு நடனம், பேஷன் அணிவகுப்பு ஆகிய போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற முறையே முதல் 3 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டி.எச். லதாதிவாகரன், கல்லூரி துணை முதல்வா்கள் என். உமா மகேஸ்வரி, பி. காயத்ரிபாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கலைநிகழ்ச்சிகளை, துணைப் பேராசிரியா்கள் கே. சவிமா, ஏ.க மலா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
கல்லூரி மாணவிகள் தலைவா் ஏ. அட்சயா வரவேற்றாா். செயலாளா் எஸ். அபிரேந்தா நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...