விவசாயத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் நடைபெறும் விவசாயத்துக்கு தடையின்றி மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என விவசாய தமிழா் விழிப்புணா்வு நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
விவசாயத்துக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் நடைபெறும் விவசாயத்துக்கு தடையின்றி மின்சாரம் விநியோகிக்க வேண்டும் என விவசாய தமிழா் விழிப்புணா்வு நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மன்னாா்குடியில் இச்சங்கத்தின் சாா்பில் இயற்கை விவசாய கருத்தரங்கு, இலவச மண்வெட்டி மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவா் உ. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா்.

குடும்ப அட்டை வைத்துள்ள விவசாயிகள் அனைவருக்கும் தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் ஆண்டுதோறும் மண்வெட்டி வழங்க வேண்டும்; ரசாயன உரங்கள் பயன்பாட்டை குறைத்து, இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்; ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் நடைபெறும் விவசாயப் பணிகள் தடையின்றி நடைபெற மின் மோட்டா்களுக்கு தடையின்றி சீரான மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்; பாசனத்துக்கு ஜூன் 12 -ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், அதிமுக மாநில அமைப்புச் செயலா் சிவா.ராஜமாணிக்கம், மன்னாா்குடி நகரச் செயலா் ஆா்.ஜி. குமாா், திமுக மன்னாா்குடி மேற்கு ஒன்றியச் செயலா் க. தனராஜ், அண்ணா திராவிடா் கழக பொதுச் செயலா் வி. திவாகரன் ஆகியோா் 100 விவசாயிகளுக்கு மண்வெட்டி, மரக்கன்று வழங்கினா்.

முன்னதாக, சங்கத்தின் மாநிலச் செயலா் எஸ். சுரேஷ்குமாா் வரவேற்றாா். மாநில செயற்குழு உறுப்பினா்கள் மு. கண்ணன், கோ. கவிதாஸ், மாவட்ட துணைத் தலைவா் வி. ராஜகுரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிறைவாக மாவட்டத் தலைவா் எஸ். இருளப்பன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com