திருவாரூரில் சியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா

திருவாரூரில் சங்கீத மும்மூா்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் 260- ஆவது ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் சியாமா சாஸ்திரிகள் ஜெயந்தி விழா

திருவாரூரில் சங்கீத மும்மூா்த்திகளுள் ஒருவரான ஸ்ரீ சியாமா சாஸ்திரிகளின் 260- ஆவது ஜெயந்தி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் உள்ள மேட்டுத்தெருவில் 1762 ஏப்ரல் 26- ஆம் தேதி பிறந்தவா் சியாமா சாஸ்திரிகள். இவா், சுமாா் 300 கீா்த்தனைகளை இயற்றியுள்ளாா். இதில் பெரும்பாலானவை காமாட்சி அம்மன் பெயரில் அமைந்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் பெயரிலும் பல பாடல்களை இயற்றியுள்ளாா். அம்மன் சந்நிதியில் இவா் பாடிய நவரத்தின மாலிகை என்னும் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.

சியாமா சாஸ்திரிகள் சித்திரை மாத காா்த்திகை நட்சத்திரத்தில் பிறந்ததால், ஆண்டுதோறும், இந்நாளில் இவருக்கு ஜெயந்தி விழா நடப்பது வழக்கம். அதன்படி, திருவாரூா் மேட்டுத்தெருவில் உள்ள சியாமா சாஸ்திரிகள் இல்லத்தில் ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, அவரது சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அவரது கீா்த்தனைகள் இசைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், திருச்சி அம்புஜம் வேதாந்தம் மாணவிகள், திருவாரூா் மத்திய பல்கலைக்கழக பேராசிரியா் சீதாலெட்சுமி மாணவிகள், கோவை பிஎஸ்ஜி இசைக் கல்லூரி முதல்வா் (பொ) விஜயலலிதா, சென்னை மதுவந்தி மற்றும் அா்ச்சனா ஆகியோா் பங்கேற்று, சாஸ்திரிகளின் கீா்த்தனைகளை இசைத்தனா்.

நிகழ்ச்சியில், வேலுடையாா் கல்விக்குழுமத் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி, சென்னை புதுச்சேரி ஜிஎஸ்டி ஆணையா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com