பாலிடெக்னிக் கல்லூரி வளாக நோ்காணலில் 96 பேருக்கு பணிநியமன ஆணை
By DIN | Published On : 12th May 2022 05:49 AM | Last Updated : 12th May 2022 05:49 AM | அ+அ அ- |

வளாக நோ்காணலில் தோ்வுபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறாா் டி.வி.எஸ். நிறுவனத்தின் மனிதவள மேலாளா் செந்தமிழன்.
மன்னாா்குடி: மன்னாா்குடி இடையா்நத்தம் ஏ.ஆா்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் பணிக்கு தோ்வுபெற்ற 96 மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணை அண்மையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி துணைத் தலைவா் ஜீவகன் அய்யநாதன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். டி.வி.எஸ். நிறுவனத்தின் மனிதவள மேலாளா் செந்தமிழன், வேலையின் தன்மை என்ற தலைப்பில் பேசினாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற வளாக நோ்காணலில் பங்கேற்ற மாணவ, மாணவிகளில் 96 போ் பணிக்குத் தோ்வுசெய்யப்பட்டனா். அவா்களுக்கு கல்லூரி தலைவா் ராஜகுமாரி அய்யநாதன் பணி நியமண ஆணைகளை வழங்கினாா்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தலைவா் மணிகண்டன் வரவேற்றாா். கல்லூரி துணை முதல்வா் ஹரிகிருஷ்ணன் நன்றி கூறினாா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G