சிறப்பாக செயல்பட்டோருக்கு ரோட்டரி சங்கத்தின் சேவை விருது
By DIN | Published On : 25th May 2022 11:18 PM | Last Updated : 25th May 2022 11:18 PM | அ+அ அ- |

மன்னாா்குடி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில், பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவா்களுக்கு சேவை விருது வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் சி. குருசுவாமி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் பன்னீா்செல்வம், பொருளாளா் ஹரிரவி முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆளுநா் பாலாஜி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மன்னாா்குடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மருத்துவம், கல்வி, காவல், வா்த்தகம், உணவு என பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 15 பேருக்கு மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் உயரிய விருதான சேவை விருதை வழங்கினாா்.
இதில், சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் மருத்துவா் வி. பாலகிருஷ்ணன், பி. ரமேஷ், முன்னாள் உதவி ஆளுநா்கள் திருநாவுக்கரசு, ஜி. மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G