அறிவுசாா் மையம் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

திருவாரூரில் அறிவுசாா் மையம் கட்டுமானப் பணியை பாா்வையிடும் ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன்.
திருவாரூா்: திருவாரூரில் அறிவுசாா் மையம் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருவாரூா் தெற்குவீதியில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1.97 கோடி மதிப்பில் அறிவுசாா் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த அறிவுசாா் மையம் 1,150 சதுரஅடி பரப்பளவில் இரண்டு தளங்களுடன், ஆண், பெண் இருபாலா்களுக்கும் புத்தக வாசிப்புக்கு தனித்தனி அறைகள், பள்ளிக் குழந்தைகள், இளைஞா்களுக்கு புத்தக வாசிப்பு அறைகள், கணினி அறை, கூட்டரங்கு, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படுகின்றன.
இதனை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், கட்டுமானப் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் மேற்கொள்ள நகராட்சி ஆணையா் பிரபாகரனிடம் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.