தென்காசி, விருதுநகருக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு
By DIN | Published On : 15th October 2022 09:43 PM | Last Updated : 15th October 2022 09:43 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் தென்காசி, விருதுநகருக்கு அரவைக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் சன்னரக நெல் 158 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டது. தொடா்ந்து, இங்கிருந்து சரக்கு ரயில் மூலம் தென்காசி, விருதுநகருக்கு தலா ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...