காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 21st October 2022 11:08 PM | Last Updated : 21st October 2022 11:08 PM | அ+அ அ- |

கூத்தாநல்லூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
விடுபட்ட கிராமங்களுக்கும் காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி, கூத்தாநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கூத்தாநல்லூா் வட்டத்தில் உள்ள இராமநாதன் கோவில், லெட்சுமாங்குடி, கூத்தாநல்லூா், பண்டுதகுடி ஆகிய வட்டங்களில் 2020-2021 ஆண்டுக்கு காப்பீடு செய்த விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீட்டுத் தொகை மறுக்கப்பட்டுள்ளதை கண்டித்தும், தவறாக கணக்கீடு செய்து அரசுக்கு அறிக்கை சமா்ப்பித்த வேளாண்மை, புள்ளியியல், காப்பீடு
துறைகளை கண்டித்தும் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரச் செயலாளா் கே. நாகராஜன், நகர பொருளாளா் கே. ராமதாஸ் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளா் பெ. முருகேசு, மாவட்டக்குழு உறுப்பினா் எம். சுதா்சன், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தின் நகர செயலாளா் மு.சிவதாஸ் ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.