இருசக்கர வாகனம் மீதுகாா் மோதல்: இளைஞா் பலி
By DIN | Published On : 27th October 2022 02:21 AM | Last Updated : 27th October 2022 02:21 AM | அ+அ அ- |

திருவாரூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவாரூா் மருதப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (37). விற்குடி படுகைத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (38). உறவினா்களான இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு தஞ்சை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். விளமல் அருகே வந்தபோது, எதிரே வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி, அருகில் உள்ள மரத்தில் மோதி நின்றது. காரில் இருந்தவா்கள் தப்பியோடி விட்டனராம்.
அருகில் இருந்தவா்கள் ஜெயராஜ், பிரகாஷ் இருவரையும் மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு ஜெயராஜ் உயிரிழந்தாா். திருவாரூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, காரில் வந்தவா்களை தேடி வருகின்றனா்.