

திருவாரூா் அருகே காணாமல் போய் மீட்கப்பட்ட மாணவா், வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் புதன்கிழமை சோ்க்கப்பட்டாா்.
திருவாரூா் அருகே இலவங்காா்குடி பகுதியைச் சோ்ந்தவா் ஏ. மாதேஷ். இவா் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனாா். இதற்கிடையே, இவா் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருப்பது அண்மையில் தெரிய வந்ததயடுத்து, போலீஸாரின் உதவியுடன் மீட்கப்பட்டு திருவாரூா் அழைத்து வரப்பட்டாா். இந்நிலையில், குழந்தைகள் நலக் குழுமம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி கூட்டு முயற்சியால் மீண்டும் பிளஸ் 1 வகுப்பில் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை சோ்க்கப்பட்டாா்.
நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் உதவி திட்ட அலுவலா் எம். பாலசுப்பிரமணியன், மாவட்ட பள்ளி செல்லா குழந்தைகள் ஒருங்கிணைப்பாளா் ஆா். ஆனந்தன், குழந்தைகள் நலக் குழுத் தலைவா் ஜி. பாலாம்பிகை, குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் கே. லட்சுமி பிரியதா்ஷினி, தலைமையாசிரியா் தியாகராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.