திருவாரூா்: கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் மகேசன் (மக்கள்) சக்தி சேவை அமைப்பு சாா்பில் சிறப்புப் பிராா்த்தனை புதன்கிழமை நடைபெற்றது.
கோதாவரி-காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணா்ந்து விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் வைத்து பிராா்த்தனை செய்யப்பட்டது. இந்த மனு, மாவட்ட ஆட்சியா் வழியாக, குடியரசுத் தலைவருக்கு வியாழக்கிழமை அனுப்பப்பட உள்ளது. அமைப்பின் நிறுவனா் சு. தென்னரசு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்ப் பண்பாட்டு பாசறைத் தலைவா் சீனிவாசன், நகா்மன்ற உறுப்பினா் வரதராஜன், உழவா் உற்பத்தியாளா் சங்க பொறுப்பாளா் தெய்வசிகாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.