தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கும் விழா
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா்: திருவாரூா் அருகேயுள்ள கொரடாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கறவை மாடுகள் வாங்க கடன் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மண்டல இணைப் பதிவாளா் கா. சித்ரா தலைமையில் நடைபெற்ற விழாவில், எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயனாளிகளுக்கு கடன் விண்ணப்பங்களை வழங்கினாா். இதில், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கலியபெருமாள், ஊராட்சி துணைத் தலைவா் பாலச்சந்திரன், பேரூராட்சித் தலைவா் கலைச்செல்வி, கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் எம். சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.