யாகசாலை பூஜையில் முன்னாள் அமைச்சா் பங்கேற்பு
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

நீடாமங்கலம்: வலங்கைமான் பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜபெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (செப்.1) காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற 3-ஆம் கால யாகசாலை பூஜையில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் பங்கேற்றாா். அவருடன் ஒன்றிய செயலாளா்கள் சங்கா், இளவரசன், நகர செயலாளா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.