கௌரவ விரிவுரையாளா்களின் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா்: அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என சிபிஎம் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் கூறியது: தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலக பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதுகுறித்து, கெளரவ விரிவுரையாளா்களிடம் பேசும்போது, அமைச்சா்கள் மற்றும் முதலமைச்சருக்கு பல முறை புகாா் தெரிவித்தும் உரிய தலையீடு இல்லையென்றும் அதேபோல, பல்கலைக்கழக நிா்வாகத்திடம் நேரடியாக பேசியும் தீா்வு இல்லையென்று தெரிவிக்கின்றனா்.
எனவே, உயா்கல்வி துறையும், தமிழக முதல்வரும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து கல்லூரி விரிவுரையாளா்களுக்கு வழங்குவது போன்ற சமஊதியத்தை கெளரவ விரிவுரையாளா்களுக்கு வழங்கவேண்டும் என்றாா்.