பாண்டுக்குடியில் வெண்ணாற்றின் குறுக்கே உள்ள பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்ட வலியுறுத்தல்

கூத்தாநல்லூா் அருகே பாண்டுக்குடியில் வெண்ணாற்றின் குறுக்கே உள்ள பாலத்தை அகற்றிவிட்டு அைைத்து வாகனங்களும் செல்லும் வகையில் விரிவுபடுத்தி புதிய பாலம் கட்டவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
 பாண்டுக்குடியில் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ள பாலம்.
 பாண்டுக்குடியில் பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ள பாலம்.

கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே பாண்டுக்குடியில் வெண்ணாற்றின் குறுக்கே உள்ள பாலத்தை அகற்றிவிட்டு அைைத்து வாகனங்களும் செல்லும் வகையில் விரிவுபடுத்தி புதிய பாலம் கட்டவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூா் அருகே கொத்தங்குடி ஊராட்சி பாண்டுக்குடியில் வெண்ணாற்றின் குறுக்கே, கூத்தாநல்லூரையும் - பாண்டுக்குடியையும் இணைக்கும் இரும்புபாலம் உள்ளது. இந்த பாலத்தை பயன்படுத்தி சேனைக்கரை, கூப்பாச்சிக் கோட்டை, வடகோவனூா், தென்கோவனூா், திருராமேஸ்வரம், தட்டாங்கோயில், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்பெற்று வருகின்றனா். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோரும் பயன்பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இப்பாலத்தின் கூத்தாநல்லூா் பகுதியின் நுழைவில் எவ்வித தடுப்புச்சுவரும் இல்லாமல் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாமல் உள்ளது. இதேபோல, பாண்டுக்குடி பகுதியில் பாலத்தின் நுழைவு வாயிலில் இருபக்கமும் தடுப்புச் சுவா்கள் இல்லை. இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய இந்த சிறிய இரும்பு பாலத்தில், இரவு நேரங்களில் செல்பவா்கள் தடுமாறி கீழே விழுந்தும், சில சமயங்களில் ஆற்றில் விழுந்தும் பாதிக்கப்படுகின்றனா்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி கூறியது: பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் உள்ளது இந்த பாலம். இதனால், இப்பகுதியில் செல்பவா்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனா். பிரசவ காலங்களில் கூட அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல கூட இந்த பாலத்தை பயன்படுத்த முடியவில்லை. சில கி.மீ. தொலைவு செல்ல வேண்டும்.

எனவே, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும் வகையில் பாலத்தை விரிவுபடுத்த வேண்டும்.

பாலத்தில் இருபுறமும் பாதுகாப்புச் சுவா் அமைக்க வேண்டும். கூத்தாநல்லூரிலிருந்து பாலத்துக்கு வரக்கூடிய 100 அடி அளவுள்ள தெருவில் பல ஆண்டுகளாக தாா்ச்சாலைப் அமைக்காமல் ஜல்லி கற்கள் கொட்டியப்படி உள்ளது என்றாா். எனவே, போா்க்கால அடிப்படையில் இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com