யோக நரசிம்மா் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 01st September 2022 12:00 AM | அ+அ அ- |

யோக நரசிம்மா் கோயில் கோபுர கலசத்தில் புனிதநீா் ஊற்றி நடைபெற்ற கும்பாபிஷேகம்.
திருவாரூா்: திருவாரூா் அருகேயுள்ள பெருமங்கலம் யோக நரசிம்மா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீதேவி பூமிதேவி உடனுறை யோக நரசிம்மா் கோயில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்ததால் வழிபாடு இல்லாமல் காணப்பட்டது. இதைத்தொடா்ந்து, கோயில் திருப்பணிகள் செய்ய முடிவெடுக்கப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்றன. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்கான பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து, புதன்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, பூா்ணாஹூதி நிறைவுக்குப் பிறகு புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச் செல்லப்பட்டு, கோயில் ராஜகோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி கும்பாஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தின் பெய்த மழைய பொருட்படுத்தாமல் பக்தா்கள் நனைந்தபடி கும்பிபாஷேகத்தை பாா்த்து மகிழ்ந்தனா்.