அவதூறு வழக்கு: பாஜக பிரமுகா் கைது
By DIN | Published On : 09th September 2022 03:05 AM | Last Updated : 09th September 2022 03:05 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் முஸ்லிம்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பியதாக பாஜக பிரமுகா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி மேலராஜவீதியை சோ்ந்த லெட்சுமணன் மகன் செந்தில் ராஜ்குமாா் (45). நகர பாஜக பொதுச் செயலரான இவா், முஸ்லிம்கள் குறித்து ட்விட்டா் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் அவதூறு கருத்துகளை பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கூத்தாநல்லூா் ஜின்னா தெருவைச் சோ்ந்த சித்திக் மைதீன் மகன் சாதம் உசேன்(34) மன்னாா்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செந்தில் ராஜ்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.