மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாம்
By DIN | Published On : 09th September 2022 03:06 AM | Last Updated : 09th September 2022 03:06 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா்க்கும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள்துறை, வருவாய்த் துறை சாா்பில் மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா தலைமை வகித்தாா்.
முகாமில், மன்னாா்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தநால்லூா் ஆகிய வட்டங்களை சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று உதவித்தொகை, வங்கிக் கடன், காதொலி கருவி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் கேட்டு 16 போ் மனு அளித்தனா்.
இந்த மனுக்கள், சம்பந்தப்பட்ட துறைகளின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதில், தனி வட்டாட்சியா்கள் குணசீலி (மன்னாா்குடி), மலைமகள் (கூத்தாநல்லூா்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.