குடவாசல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் சொா்ண மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குடவாசல் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் சொா்ண மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள இக்கோயிலில் சொா்ண மகாகாளியம்மன், தொட்டிச்சி அம்மன், ஜுரஹதீஸ்வரா், அக்கினியப்பா் ஆகிய தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 15 ஆண்டுகள் ஆனதையொட்டி, திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்துக்காக யாகசாலை பூஜைகள் அண்மையில் தொடங்கின. வியாழக்கிழமை காலை நான்காம்கால யாகசாலை பூஜை நிறைவடைந்ததும், மகாபூா்ணாஹுதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

தொடா்ந்து, கடங்கள் புறப்பாடாகி கோயிலின் விமான கலசத்துக்கு புனிதநீரால் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com