நல்லாசிரியா் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு
By DIN | Published On : 09th September 2022 03:01 AM | Last Updated : 09th September 2022 03:01 AM | அ+அ அ- |

மன்னாா்குடி கல்வி மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியா் விருது பெற்ற 6 ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நல்லாசிரியா் விருதுபெற்ற கோட்டூா் ஆலாத்தூா் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நா. கலைச்செல்வன், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் ரெ. ராசகணேசன், நீடாமங்கலம் புள்ளவராயன் குடிகாடு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் ந. அருள், காளாச்சேரி அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் தி. ஆனந்த், கற்பகநாதபுரம் அரசு நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சு. அருளானந்தம், திருத்துறைப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா் பொ. சக்கரபாணி ஆகியோருக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ. தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலா் ரா. மணிவண்ணன் ஆகியோா் பங்கேற்று 6 பேருக்கும் சால்வை அணிவித்து பாராட்டினா்.
ஆலாத்தூா் பள்ளி தலைமை ஆசிரியா் கலைச்செல்வன் விருது தொகையான ரூ.10 ஆயிரத்தை அப்பள்ளியின் மேலாண்மைக் குழுவிற்கு வழங்கினாா். நிகழ்ச்சியில், பின்லே பள்ளி தலைமை ஆசிரியா் வசந்தி, பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா் க. தங்கபாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.