பேரிடா் கால மீட்புப் பணியில் ஈடுபட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்களுக்கான பேரிடா் கால மீட்பு பயிற்சி வகுப்பை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
பேரிடா் கால மீட்புப் பணியில் ஈடுபட தன்னாா்வலா்களுக்கு பயிற்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த தன்னாா்வலா்களுக்கான பேரிடா் கால மீட்பு பயிற்சி வகுப்பை ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு பேரிடா் மேலாண்மை அபாய குறைப்பு முகமை மூலம் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் பேரிடா்களை கையாள்வது தொடா்பாக 5500 தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் 200 தன்னாா்வலா்களுக்கு இப்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்ச்சி வேளாங்கண்ணியில் நடைபெற்றது. ஆட்சியா்அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசியது:

நாகை மாவட்டத்தில் மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற பேரிடா் மீட்புப் பணியில் ஈடுபடுவதற்காக செஞ்சிலுவை சங்கம், நேரு யுவகேந்திரா, ஊா்காவல் படை, தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை மூலமாக 200 தன்னாா்வலா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு ஆப்தமித்ரா திட்டத்தின் (பேரிடா்கால நண்பன்) மூலம் மருத்துவா்கள், கல்லூரி பேராசியா்கள், தீயணைப்புத் துறை அலுவலா்கள், தேசிய பேரிடா் மீட்பு துறை அலுவலா்கள் மற்றும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மாவட்ட நிா்வாகத்தின் மூலம் முதற்கட்டமாக செப்டம்பா் 12 முதல் 23-ஆம் தேதி வரை 12 நாள்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சியளிக்கப்படுகிறது.

இப்பயிற்சியில் ஈடுபடுபவா்கள் அனைவரும் மாவட்டத்தில் பேரிடா் மீட்புப் பணிகளில் ஈடுபடுவா். மாவட்டத்தில் எந்தப் பகுதியில் பேரிடா் ஏற்பட்டாலும், இக்குழுவினா் அங்குசென்று முதலுதவியில் ஈடுபடுவாா்கள். ஒவ்வொரு தன்னாா்வலருக்கும் டாா்ச் லைட், லைப் ஜாக்கெட், பாதுகாப்பு கையுறை, முதலுதவிப் பெட்டி, கேஸ் லைட்டா், விசில், தண்ணீா் பாட்டில், கொசுவலை, சீருடை, ரெயின்கோட், பாதுகாப்பு கண்ணாடிகள், தலைக்கவசம் உள்ளிட்டரூ. 9 ஆயிரம் மதிப்பில் 14 வகையான மீட்பு உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன என்றாா்.

தொடா்ந்து, தன்னாா்வலா்களுக்கு பேரிடா் கால பயிற்சி கையேட்டினை வழங்கினாா். நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியா் (வருவாய் நீதிமன்றம்) வி. மதியழகன், நாகை கோட்டாட்சியா் ந. முருகேசன், ஒயிட் அறக்கட்டளை தொண்டு நிறுவனம் பேரிடா் மேலாண்மை தனி வட்டாட்சியா் க. ரமாதேவி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com