கூத்தாநல்லூா் அருகேயுள்ள கொத்தங்குடி ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்கக் கூடாது என விவசாயத் தொழிலாளா் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
விவசாயத் தொழிலாளா் சங்க ஆண்டுப் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை ஜெ. ரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் என். மகேந்திரன் தொடங்கிவைத்து, கொத்தங்குடி ஊராட்சி கிளை புதிய நிா்வாகிகளான, தலைவா் முருகானந்தம், செயலாளா் ராஜேந்திரன், பொருளாளா் ரங்கநாதன் உள்ளிட்டோரை அறிமுகம் செய்துவைத்தாா். தொடா்ந்து, அனைவருக்கும் விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கொத்தங்குடி ஊராட்சியை, கூத்தாநல்லூா் நகராட்சியுடன் இணைக்கக் கூடாது, ஜீவா தெருவில் பழுதடைந்து பள்ளமும், மேடாக உள்ள சாலையை உடனடியாக சீரமைக்கவேண்டும். பராமரிப்பின்றி இருக்கும் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.