பொதக்குடி ஜமாஅத் நிர்வாகிகள்.
பொதக்குடி ஜமாஅத் நிர்வாகிகள்.

கூத்தாநல்லூர்: பொதக்குடி ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு

கூத்தாநல்லூர் தாலுக்கா பொதக்குடி உறவின்முறை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

கூத்தாநல்லூர் தாலுக்கா பொதக்குடி உறவின்முறை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் நிருவாக சபை அறப்பணி சங்கத்தின் நிர்வாக குழுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலில், எஸ். ஏ.மஹதூம் மைதீன், கே.எம்.இக்பால்தீன், என்.எம். அப்துல்காதர், கே.ஏ.கே ஹாஜா பகுருதீன் உள்ளிட்ட 4 பேர் தலைவர் பதவிக்கும், எம்.எம்.ரஃப்யூதீன், எஸ்.ஹாஜா கஜுபுதீன் ஆகிய இருவர் செயலாளர் பதவிக்கும், எம்.எம்.ஜே. பதுருல் ஜமான், என் முகம்மது சுலைமான் உள்ளிட்ட இருவர் பொருளாளர் பதவிக்கு என எட்டு பேர் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் ஏற்கனவே பதவி வகித்த தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட மூவரும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். பெரியப் பள்ளிவாசல் எதிரேயுள்ள அல்அமீன் அரங்கத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. பொதக்குடி ஜமாஅத்திற்கு உட்பட்ட ஆயிரத்து எழுநூறு வாக்காளர்களில், 600 க்கும் மேற்பட்டவர்கள் சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், அபுதாபி, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றுகிறார்கள். காலையில் தொடங்கிய வாக்குப்பதிவில் மாலை 4 மணி வரை  890 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை ஒரு மேஜைக்கு 3 பேர் என 3 மேஜைகளில் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செல்லாத வாக்கு என தனித்தனிப் பெட்டிகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பதிவான 890 வாக்குகளில், தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கு பதிவான வாக்குகளில் தலா 24, பொருளாளர் பதவிக்கு பதிவான வாக்குகளில் 21 என மொத்தம் 69 வாக்குகள் 
செல்லாதவைகளாகும். இதில், 348 வாக்குகள் பெற்று எஸ்.ஏ. மஹதூம் மைதீன் தலைவராகவும், 545 வாக்குகள் பெற்று எம்.எம்.ரஃபியுதீன் செயலாளராகவும், 441 வாக்குகள் பெற்று என்.முகம்மது சுலைமான் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளுக்கு, தேர்தல் கமிட்டித் தலைவர் பெரியப் பள்ளி வாசல் முத்தவல்லி பி.எம்.ஷாஜஹான் மற்றும் ஊர் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கே.எம்.இக்பால்தீன் 207, என்.எம்.அப்துல் காதர் 173, கே.ஏ.கே.ஹாஜா பஹுருதீன் 138, செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட எஸ்.ஹாஜா நஜீபுதீன் 320, பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட எம்.எம்.ஜெ.பதுருல் ஜமான் 426 என வாக்குகள் பெற்றனர்.

தேர்தல் பணிகளை தேர்தல் கமிட்டியாளர்கள் முத்தவல்லிகள் பெரிய பள்ளிவாசல் பி.எம்.ஷாஜஹான், புதுமனை பள்ளிவாசல் எஸ்.டி. ஏ.ஜியாவுதீன் , மேலப்பள்ளிவாசல் ஏ.எம்.லியாகத்தலி, ஜன்னத்துல் பிர்தெஸ் பள்ளிவாசல் பிஎம்.அமானுல்லாஹ், பாத்திமா பள்ளிவாசல் பி.எம்.டீ.ஜெயனுல் ஆபிதீன் மற்றும் தேர்தல் நிருவாக்குழு உறுப்பினர்கள் ஹாஜஹான், ஜெஹபர் தீன், முஹம்மது ரப்பானி, அன்சாரி, சுல்தான் சலாஹுதீன், புர்ஹானுதீன், இக்பால் தீன், அப்துல் அலீம், சேக் மைதீன், முஹம்மது ரபி, நைனா முஹம்மது, சர்புதீன் மற்றும் அக்பர் அலி உள்ளிட்டோர் கவனித்தனர்.

 பாதுகாப்பு ஏற்பாடுகளை குற்றப் பொருளாதார பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில், ஆய்வாளர்கள் எம்.என்.இளங்கோவன், ஶ்ரீதர், மணிமேகலை, உதவி ஆய்வாளர்கள் ராஜா,ராஜேந்திரன், மற்றும் 26 போலீசார் பாதுகாப்பு பணிகளை கவனித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com