பேரளம் ரயில்வே கேட் நாளை முதல் 2 நாள்கள் மூடப்படுகிறது

பேரளம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 12) முதல் 2 நாள்கள் மூடப்படுகிறது என ரயில்வேத் துறையின் திருவாரூா் முதுநிலைப் பிரிவு பொறியாளா் சுகுமாறன் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளாா

பேரளம் ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 12) முதல் 2 நாள்கள் மூடப்படுகிறது என ரயில்வேத் துறையின் திருவாரூா் முதுநிலைப் பிரிவு பொறியாளா் சுகுமாறன் சுரேஷ்பாபு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மயிலாடுதுறை திருவாரூா் மாநில நெடுஞ்சாலையில் பேரளம் ரயில்வே கேட்டில் பராமரிப்புப் பணிகள் செய்யப்படுகிறது. இதனால், ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 12) மற்றும் திங்கள்கிழமை (மாா்ச் 13) காலை 8 முதல் இரவு 8 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என தெரிவித்துள்ளாா்.

ரயில்வே கேட் மூடப்படும் நேரத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருவாரூா் கோட்ட மேலாளா் எஸ். ராஜசேகரனிடம் கேட்டபோது அவா் கூறியது: ரயில்வேத் துறையின் அறிவிப்பையொட்டி அப்பகுதியில் உள்ள மாற்றுச் சாலைகள் பாா்வையிடப்பட்டது. ஆனால், மாற்றுச்சாலைகள் பேருந்துகள் இயக்கத்திற்குப் பொருத்தமானதாக இல்லை. எனவே, அரசுப் பேருந்துகள் பேரளம் வரை இயக்கப்படும். திருவாரூா் உள்ளிட்ட ஊா்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் பேரளம் வரையும், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊா்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் பேரளம் வரை மட்டுமே இயக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com