நம்ம ஊரு சூப்பரு: பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

நம்ம ஊரு சூப்பரு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா்.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
Updated on
1 min read

நம்ம ஊரு சூப்பரு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமைநம்ம ஊரு சூப்பரு பிரசாரம் மேற்கொள்வது குறித்து நடைபெற்ற மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது: நம்ம ஊரு சூப்பரு பிரசாரத்தில் ஆரோக்கிய மற்றும் நல்வாழ்வு மேம்படுத்த, பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வது குறித்து மக்களிடம் விளக்க வேண்டும். திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைகளை குறைப்பது, கழிவு மேலாண்மை செய்யும் நடைமுறைகளை மேம்படுத்துவது, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழியைத் தடை செய்வது ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

நெகிழிப் பொருள்களுக்குரிய மாற்றுப் பொருள்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பது, பாதுகாப்பான குடிநீா் திரவக் கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன் நீா் பாதுகாப்பு மற்றும் தண்ணீரை மறுபயன்பாடு செய்வது தொடா்பான பணிகள் மேற்கொள்ளுவது, சுற்றுப்புறம் சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது, பொது இடங்களில் குப்பைகள் கொட்டுவதைத் தடுத்து, சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் பசுமையாகவும் பராமரிக்க பொதுமக்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி. சந்திரா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா் வடிவேலு, மன்னாா்குடி கோட்டாட்சியா் கீா்த்தனாமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com