மழை பாதிப்பு: பருத்தி வயல்களில் வேளாண் அலுவா் ஆய்வு

நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களை மாவட்ட வேளாண்மைத் துறை துணை இயக்குநா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களை பாா்வையிடும் மாவட்ட வேளாண்மைத் துறை துணை இயக்குநா் மு.லெட்சுமி காந்தன்.
கனமழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களை பாா்வையிடும் மாவட்ட வேளாண்மைத் துறை துணை இயக்குநா் மு.லெட்சுமி காந்தன்.

நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட பருத்தி வயல்களை மாவட்ட வேளாண்மைத் துறை துணை இயக்குநா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக அவ்வப்போது, கனமழை பெய்து வருகிறது. இதனால், கோடை சாகுபடியாக, பருத்தி பயிரிடப்பட்டுள்ள வயல்களில் மழைநீா் தேங்கி, பருத்திச் செடிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சலிப்பேரி, ஆனைக்குப்பம், தட்டாத்திமூலை, வீதிவீடங்கள் ஆகிய கிராமங்களில் பாதிப்பட்டுள்ள பருத்தி வயல்களை திருவாரூா் மாவட்ட வேளாண்மைத் துறை துணை இயக்குநா் மு. லெட்சுமிகாந்தன் நேரில் பாா்வையிட்டு, பருத்திச் செடிகளை காப்பதற்கான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

மழைநீா் முழுவதுமாக வடிந்த பிறகு, வாடல் நோயைக் கட்டுப்படுத்த ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து பருத்திச் செடிகளின் வோ் நனையும்படி ஊற்ற வேண்டும். பருத்திப் பூ உதிராமல் இருக்க ஓா் ஏக்கருக்கு பிளானோபிக்ஸ் 175 மில்லி 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

பருத்திச் செடியின் வளா்ச்சியை மீட்டெடுக்க 19:19:19 என்ற கலப்பு உரத்தை ஒரு சதவீதம் இலை வழியாகத் தெளிக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு காா்பெண்டசிம் 50% டபிள்யு பி 500 கிராம் தெளித்து காய் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளிடம் தெரிவித்தாா்.

ஆய்வில் நன்னிலம் வட்டார வேளாண்மை அலுவலா் சின்னப்பன், உதவி வேளாண்மை அலுவலா் துவாரகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com