

சிறுபுலியூா் ஸ்ரீகிருபாசமுத்திரப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, பெருமாள் விஸ்வரூப அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
நன்னிலம் அருகே கொல்லுமாங்குடி சிறுபுலியூரில் ஸ்ரீதயாநாயகி சமேத கிருபாசமுத்திரப் பெருமாள் கோயில் உள்ளது. பாலவியாக்ரபுரம் என்று அழைக்கப்படும் இக்கோயில், 108 வைணவத் திருப்பதிகளில் 11-ஆவது பதியாகவும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றதும் ஆகும். இங்கு, புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் போன்றே தெற்கு நோக்கிய சந்நிதியில் பெருமாள் பாலசயனமாகக் காட்சியளிக்கிறாா்.
இக்கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையில் காலை ஸ்ரீதேவி, ஸ்ரீ பூமிதேவி சமேத கிருபாசமுத்திரப் பெருமாள் விஸ்வரூப அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து திருவாராதனம், திருப்பாவை சாற்றுமுறை, சிறப்புத் திருமஞ்சனம், புஷ்பங்கிச் சேவை நடைபெற்றது. மாலையில் மணவாள மாமுனிகள் உள்புறப்பாடு சேவையும், சாற்றுமுறையும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.