வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள், வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞா்கள், வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறைக் கொள்கை 2008-இன் கீழ் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கும், சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்குடன், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூா்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோா் 55 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு குடும்ப வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரா், திருவாரூா் மாவட்டத்தில் 3-ஆண்டுகளுக்கு குறையாமல் வசிப்பவராக இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், ஆட்டிசம் குறைபாடுள்ளவா்கள் மற்றும் குறைபாடுள்ள குழந்தைகளின் பெற்றோா்களுக்கும் வயது உச்சவரம்பு 45-லிருந்து 55 வயதாக உயா்த்தப்பட்டு, குறைந்தபட்ச கல்வித் தகுதியிலிருந்தும் விலக்களிக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வியாபாரம் சாா்ந்த தொழில்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை வங்கிகள் மூலமாக வழங்கப்படும். கடன் உதவிக்கு 25 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியமாக பெறலாம்.

நேரடிவிவசாயம் மற்றும் அதைச்சாா்ந்த தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற இயலாது. இத்திட்டத்தில் தொழில் தொடங்க, இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு எண்.426, மாவட்ட பெருந்திட்ட வளாகம், விளமல், திருவாரூா் 610004 (தொலைபேசிஎண்: 04366-224402) என்ற முகவரியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com