நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயில் புஷ்பபல்லக்கு விழா
By DIN | Published On : 15th April 2023 10:05 PM | Last Updated : 15th April 2023 10:05 PM | அ+அ அ- |

புஷ்ப பல்லக்கில் வீதியுலா புறப்பாடான மகாமாரியம்மன்.
நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் 38-ஆம் ஆண்டு புஷ்ப பல்லக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுத் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் சிறப்பு நிகழ்வாக, தமிழ்ப் புத்தாண்டு தினமான வெள்ளிக்கிழமை இரவு புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.
இதையொட்டி, சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, இரவில் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் மகாமாரியம்மன் எழுந்தருளியதும் வீதியுலா நடைபெற்றது.
சிவன், பாா்வதி, பச்சைக்காளி, பவளக் காளியாட்டங்களுடன் வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், தமிழ் இளைஞா் பக்தா் கழகத்தினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.