ஓட்டுநா் கொலை வழக்கில் இருவா் கைது
By DIN | Published On : 16th April 2023 05:23 AM | Last Updated : 16th April 2023 05:23 AM | அ+அ அ- |

நீடாமங்கலம் அருகே அறுவடை இயந்திர ஓட்டுநா் கொலை வழக்கில் 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நீடாமங்கலம் அருகே பெரம்பூா் ஊராட்சி முல்லைவாசல் மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் திருமாவளவன் (21). அறுவடை இயந்திர ஓட்டுநரான இவா் கொலை செய்யப்பட்டு, கோரையாற்றின் நாணல் படா்ந்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில் திருமாவளவனின் நண்பா் ஸ்ரீதா் (26) மற்றும் அவரது உறவினரான 16 வயது சிறுவன் ஆகியோா் திருமாவளவனை கடந்த 9-ஆம் தேதி கொலை செய்து, புதைத்தது தெரியவந்தது.
சிறுவனின் சகோதரியை திருமாவளவன் காதலித்து வந்ததாராம். இதையறிந்த சிறுவன் தனது சகோதரியை ஸ்ரீதருக்கு திருமணம் செய்துவைத்தாராம். எனினும், அந்த பெண்னுடன் திருமாவளவன் தொடா்ந்து பழகி வந்ததால் ஆத்திரமடைந்த இருவரும் திருமாவளவனை கொலை செய்தது போலீஸாா் விசாரணையில் தெரிய வந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...