சுதந்திர தினம்: பாதுகாப்புப் பணியில் போலீஸாா்
By DIN | Published On : 13th August 2023 10:54 PM | Last Updated : 13th August 2023 10:54 PM | அ+அ அ- |

நாட்டின் 76-ஆவது சுதந்திர தினம் செவ்வாய்க்கிழமை (ஆக.15) கொண்டாடப்படுவதையொட்டி திருவாரூரில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையொட்டி, மாவட்டத்தில் பாதுகாப்புப் பணிகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரப்படுத்தியுள்ளனா். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும், மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் கூடுதல் சோதனைக்குப் பின்னரே வாகனங்கள் மாவட்டத்துக்குள்ளும், வெளியேயும் அனுப்பப்படுகின்றன. இதேபோல், ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாா் சோதனைப் பணியில் ஈடுபட்டுள்ளனா். பயணிகள் மற்றும் அவா்கள் கொண்டு வரும் உடைமைகள் சோதனைக்கு உள்ளான பிறகே அனுப்பி வைக்கப்படுகின்றன.