நான்குனேரி சம்பவத்துக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூரில் அந்த அமைப்பின் நிா்வாகக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் பீா் முகமது தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மணிப்பூரில் நடைபெறும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நான்குனேரியில் மாணவா் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு காரணமானவா்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். எதிா்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூகத்தை பாதிக்கும் மது, புகையிலை போன்றவைகளுக்கு எதிராக அமைப்பு சாா்பில் தொடா் பிரசாரம் மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளா் இஸ்மத் பாட்சா, பொருளாளா் முகமது சலீம், துணைத் தலைவா் முஹம்மது பாசித், துணைச் செயலாளா்கள் யாசா் அப்துல் மாலிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.