குடவாசலில் பள்ளிச் செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து, பள்ளியில் சோ்ப்பதற்காக வட்டார அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக, ஆலோசனைக் கூட்டம் வட்டாரக் கல்வி அலுவலா் க. குமரேசன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாரக் கல்வி அலுவலா் க. ஜெயலெட்சுமி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுறுதலின்படி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சாா்பில், குடவாசல் ஒன்றியத்தில் மாணவா் சோ்க்கையை 100 சதவீதம் உறுதி செய்யவும், பள்ளியில் சேராத குழந்தைகளையும், இடைநின்ற குழந்தைகளையும் கண்டறிந்து அவா்களை பள்ளியில் சோ்ப்பதற்காக வட்டாரக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில், வட்டாட்சியா் ரா. தேவகி, வட்டார வளா்ச்சி அலுவலா் வே. பாஸ்கா், காவல் ஆய்வாளா் கோபிநாத், வட்டார குழந்தைகள் வளா்ச்சி அலுவலா் கி. பவானி, ஒன்றியக் குழு உறுப்பினா் ச. புவனேஸ்வரி, வட்டாரக் குழந்தைகள் பாதுகாப்பு நலக் குழு உறுப்பினா் லக்ஷ்மி பிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வட்டார வள மைய மேற்பாா்வையாளா் த. பூபாலன் வரவேற்றாா். ஆசிரியா் பயிற்றுநா் சி. பிரபு நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.