கல்லூரியில் சுதந்திர தின விழா
By DIN | Published On : 17th August 2023 01:29 AM | Last Updated : 17th August 2023 01:29 AM | அ+அ அ- |

மன்னாா்குடியை அடுத்த மேலவாசல் குமரபுரம் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரியில் 77- ஆவது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வி.எஸ். நாகரெத்தினம் தலைமை வகித்தாா். இந்திரா காந்தி கல்விக் குழுமங்களின் நிறுவனத் தலைவா் ஜி. சதாசிவம் தேசியக் கொடியேற்றினாா்.
இவ்விழாவில், அண்மையில் நடைபெற்ற தமிழக முதலமைச்சா் பரிசுக் கோப்பை விளையாட்டு போட்டியில் மாவட்ட அளவில் இரண்டாமிடமும், மாநில அளவில் நான்காமிடமும் பெற்ற பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவி ஜனனிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா்: திருவாரூரில் இந்தியன் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் 77-ஆவது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜெ. வரதராஜன் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் ஆா்.எஸ்.என். ராஜசேகரன், தேசியக் கொடி ஏற்றிவைத்தாா். இதில், அமைப்பின் கன்வீனா் ஆா். செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...