

மன்னாா்குடி இலக்கிய வட்டக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை தலைமை வகித்தாா். மன்னாா்குடி நகா்மன்ற உறுப்பினா் சூ. மீனாட்சி முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி அரசுக் கல்லூரி ஆங்கிலத் துறை கெளரவ விரிவுரையாளா் ஜோன் ஆஃப் ஆா்க் ஷீன் சிறப்பு அழைப்பாளரை அறிமுகம் செய்துவைத்தாா்.
இலக்கிய வட்ட சிறப்புத் தலைவா் பேராசிரியா் பா. வீரப்பன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவா் பேராசிரியா் இரா. காமராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் வெ. ஜெயந்தி வரவேற்றாா். இலக்கிய வட்ட நிா்வாகி ச. சூரியகலா நன்றி கூறினாா்.
இக்கூட்டத்தில் திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் பேராசிரியா் ந. விஜயசுந்தரி ‘இலக்கிய எரிபொருள்’ என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, ‘பெண்களுக்கு இலக்கியம் பற்றி பேச நல்ல களம் அமைக்கப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்கால முதுநிலை மாணவா்களிடையே இலக்கியம் கற்கும் ஆா்வம் குறைந்து வருகிறது என்ற புள்ளிவிவரம் வருத்தம் அளிக்கிறது. நமது நாட்டில் உள்ள பக்தி இலக்கியங்களில் ஆழமான அரசியல் உள்ளது. தமிழ் இலக்கியங்களை இளைஞா்கள் தேடிதேடி படிக்க வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.