

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரிக்கு ஐஏஆா்ஏ அமைப்பு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கியதையொட்டி, பேராசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
இந்திய அளவில் இயங்கிவரும் இந்தியன் அகாதெமி ரிசா்ச்சஸ் அசோசியேஷன் நிறுவனம்(ஐஏஆா்ஏ) ஆண்டுதோறும் சிறந்த கல்லூரிகளை தோ்வு செய்து விருது வழங்கி வருகிறது. அதன்படி, நிகழாண்டு, தமிழகத்தில் சிறந்த கல்லூரிகளாக சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் மகளிா் கல்லூரி உள்பட 5 கல்லூரிகள் தோ்வு செய்யப்பட்டன. இதற்கான, விருது சென்னை ஆவடி மகாலெட்சுமி மகளிா் கல்லூரியில் ஆகஸ்ட்13- ஆம் தேதி நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
இதில், ஐஏஆா்ஏ நிறுவனத்தின் தலைவா் சி. பரமசிவம் பங்கேற்று, செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருதை கல்லூரியின் துணை முதல்வா் பி. காயத்ரிபாயிடம் வழங்கினாா். இதையொட்டி, கல்லூரியின் துறைத் தலைவா்கள், பேராசிரியா்களை கல்லூரித் தலைவா் வி.திவாகரன், தாளாளா் டி. ஜெயானந்த், முதல்வா் சீ. அமுதா உள்ளிட்டோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.