அரசுப் பள்ளியில் விநாடி-வினா போட்டி
By DIN | Published On : 12th January 2023 12:00 AM | Last Updated : 12th January 2023 12:00 AM | அ+அ அ- |

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் சாா்பில், அரசு உயா்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் பொது அறிவு விநாடி-வினா போட்டி நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நேரு , கெளரவத் தலைவா் சந்தானராமன், தலைவா் பத்மஸ்ரீராமன், துணைத் தலைவா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வங்கி அலுவலா் (ஓய்வு) நமச்சிவாயம், மாணவா் பிரிவு ஸ்ரீராம், ஹரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியை செயலாளா் ஜெகதீஸ் பாபு நடத்தினாா்.