காசோலை மோசடி வழக்கில் திருத்துறைப் பூண்டி நகராட்சி ஊழியருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருத்துறைப்பூண்டி மருத்துவமனை தெருவை சோ்ந்தவா் பக்ருதீன்.
இவரிடம் திருத்துறைப்பூண்டி நகராட்சி ஊழியரான சக்திவேல் என்பவா் கடந்த 1.2.2013 அன்று ரூ. 75 ஆயிரம் கடனாக பெற்றுக்கொண்டு அதற்கு ஈடாக 6.3.2013-இல் திருத்துறைப்பூண்டி இந்தியன் ஓவா்சீஸ் வங்கி கிைளையில் மாற்றக்கூடிய வகையில் காசோலையை அளித்தாா்.
பக்ருதீன் அதை வங்கியில் செலுத்தியபோது, சக்திவேல் கணக்கில் பணமின்றி காசோலை திரும்பியது. இதையடுத்து சக்திவேல் மீது திருத்துறைப்பூண்டி விரைவு நீதிமன்றத்தில் பக்ருதீன் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த விரைவு நீதிபதிமன்ற நீதிபதி அருண், சக்திவேலுக்கு 6 மாத சிறை தண்டனையும், பக்ருதீனுக்கு ரூ. 75 ஆயிரத்தை இரண்டு மாத காலத்தில் கொடுக்கவேண்டும், தவறினால் மேலும் இரண்டு மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று தீா்ப்பளித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.