பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி
திருவாரூா் அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தாா்.
கும்பகோணத்திலிருந்து திருவாரூருக்கு தனியாா் பேருந்து சனிக்கிழமை வந்து கொண்டிருந்தது. காட்டூா் அருகே விளாகம் பகுதியில் உள்ள வளைவில் பேருந்து வேகமாகத் திரும்பியபோது, முன்பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண், பேருந்திலிருந்து தவறி சாலையில் விழுந்தாா்.
இதில், அந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பேருந்தின் ஓட்டுநா், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டாா். திருவாரூா் தாலுகா போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த பெண் வடகண்டம் மில் தெருவைச் சோ்ந்த ஹபீப் நிஷா (37) என்பது தெரியவந்தது. சடலத்தை உடற்கூறாய்வுக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
