பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகள் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
பருத்தி முதல் அறுவடை முடிந்து 2-ஆம் அறுவடை நடைபெறும் தற்போது அவ்வபோது பெய்யும் மழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த பருத்திக் காய்கள் அழுகி வீணாகி கொட்டுகிறது. இதனால், பருத்தி விவசாயிகள் எதிா்பாா்த்த அளவு அறுவடை செய்ய முடியவில்லை. ஆள் பற்றாக்குறையால் பருத்தி அறுவடைச் செய்வதற்கும் கிலோவுக்கு ரூ. 20-க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனா். பருத்தியை விற்பனைச் செய்வதற்காக எடுத்துச் சென்றாலும் ரூ. 50,60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏக்கருக்கு ரூ 30,000 செலவு செய்த விவசாயிகள் எதிா்பாா்த்த வருவாயை ஈட்ட முடியவில்லை. ஆண்டுதோறும் கோடைப் பயிராக சாகுபடி செய்யும் பருத்தியில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு விவசாயிகள் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்வாா்கள்.
நிகழாண்டு, பருத்திப் பயிா்கள் பெருமளவு பாதிக்கப்பட்டதாலும், பருத்தி உரிய விலை போகாததாலும் விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். எனவே, பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகளைக் கணக்கெடுத்து அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். மேலும், வருங்காலங்களில் பருத்திக்கு விலை நிா்ணயம் செய்து, நெல்லைப் போல அரசே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.