ஆன்லைன் மோசடி விவகாரம்:சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை

திருவாரூரில் ஆன்லைனில் பணம் மோசடி தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

திருவாரூரில் ஆன்லைனில் பணம் மோசடி தொடா்பாக சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவாரூா் மாவட்டம், எடைமேலையூா் பகுதியைச் சோ்ந்தவா் காமராஜ் (60). கோ -ஆப்டெக்ஸ் ஊழியரான இவரை, கடந்த ஏப்ரல் மாதம் தொடா்பு கொண்ட ஒருவா், வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி, குறைந்த வட்டியில் வங்கிக் கடன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய காமராஜ் ரூ. 10 லட்சம் தேவைப்படுவதாக கூறியுள்ளாா். அவரின் வங்கி விவரங்களைக் கேட்ட அந்த நபா், சேவைக் கட்டணம் உள்ளிட்ட இதர செலவுகளுக்கு பணம் அனுப்புமாறு தெரிவித்தாராம். இதைத்தொடா்ந்து காமராஜ், பல்வேறு தவணைகளாக ரூ. 7,21,228 செலுத்தியுள்ளாா். அதன் பிறகு அந்த நபரை, காமராஜால் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதுகுறித்து காமராஜ், திருவாரூா் சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்தாா்.

இதேபோல, திருவாரூரில் வசிக்கும் ஸ்ரீதா் (40). வெளிநாட்டில் வேலைபாா்த்து வந்த இவா், கரோனா முடக்கத்தின்போது, ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வந்தாா். இவா் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சி செய்து வந்தாராம். இதற்காக அவா் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தாா்.

இதனிடையே, மா்ம நபா் ஒருவா் இவரைத் தொடா்புகொண்டு, வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அவரை வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதாக கூறி, விசா உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தாராம்.

இதை நம்பிய ஸ்ரீதா், கடந்த ஜனவரியில் குறிப்பிட்ட தொகை செலுத்தியுள்ளாா். அதேபோல தன்னுடன் வெளிநாட்டில் வேலைபாா்த்து, தற்போது சொந்த ஊரில் இருக்கும் காரைக்காரை சோ்ந்த அலெக்ஸ் (41) உள்ளிட்ட 7 பேரிடமும் ரூ. 3, 43,100 வரை ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தாா்.

ஆனால், அந்த நபா் வேலை வாங்கிக் கொடுக்காமல் நாள்களைக் கடத்தியதால், ஸ்ரீதா் திருவாரூா் சைபா் கிரைம் போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இந்த இரு புகாா்கள் குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com