இ- சேவை மையம் தொடங்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 15th June 2023 12:59 AM | Last Updated : 15th June 2023 12:59 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் இ- சேவை மையம் தொடங்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு கிராமந்தோறும் தனியாா் இ- சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
எனவே, இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டா்கள் 12- ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் நல்லஅறிவும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியை படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இ-சேவை மையக் கட்டடம் 100 சதுர மீட்டருக்குள் இருப்பதோடு, மையத்தில் கணினி, பிரிண்டா், ஸ்கேனா் மற்றும் பயோமெட்ரிக் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இருப்பது அவசியமாகும். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தில் மையம் அமைக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வருவாய் பகிா்வுமுறையின் விதிகளின்படி இயக்க வேண்டும். தோ்வு செய்யப்பட்டு உரிமம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளி ஆபரேட்டா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும்.
எனவே, திருவாரூா் மாவட்டத்திலுள்ள படித்த கணினி பயிற்சி பெற்ற மாற்றுத்திறனாளிகள், தனியாா் இ-சேவை மையம் அமைக்க ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.