திருவாரூா் அருகே புலிவலம் ஊராட்சியில் இல்லம் தேடிக் கல்வி மைய உயா் தொடக்க நிலை மாணவா்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா எனும் தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு புலிவலம் ஊராட்சித் தலைவா் காளிமுத்து தலைமை வகித்தாா். ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா தொடக்கிவைத்தாா். வானவில் மன்ற கருத்தாளா்கள் எளிய அறிவியல் பரிசோதனைகள் செய்து காட்டினா். இதில், ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க. ரவிச்சந்திரன், இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.