மத்தியப் பல்கலை.யில் மக்கள் தொகை ஆராய்ச்சி மையம் அமைக்க புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.
மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எம். கிருஷ்ணன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம்.
மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் எம். கிருஷ்ணன் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தம்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.

இதுகுறித்து பல்கலைக்கழக மக்கள் தொடா்புக் குழு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து மாதிரி மைக்ரோ டேட்டா குறித்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான மையம் அமைப்பதற்காக புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மையம் புவியியல் துறையின் பராமரிப்பில் இயங்கும்.

இந்த மையம் மக்கள் தொகை குறித்த பல்வேறு விவரங்களை, ஆராய்ச்சியாளா்களுக்கு வழங்கும். அத்துடன், ஆராய்ச்சியாளா்கள் வழங்கும் முன்மொழிவுகள், மத்தியப் பல்கலைக்கழகத்தால் அமைக்கப்படும் வழிநடத்தல் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பின், நாடு முழுவதும் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன் தெரிவித்தது:

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் சாா்பில் பதிவாளா் சுலோச்சனா சேகா் மற்றும் இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநா் சஜ்ஜன்சிங் ஆா். சவான் ஆகியோா் கையெழுத்திட்டு, புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மையம் மக்கள் தொகை பற்றிய ஆராய்ச்சியாளா்களுக்கு பலவகைகளில் உதவியாக இருக்கும். மேலும், இந்திய மக்களின் சமூகப் பொருளாதாரம் குறித்து அறிய உதவிபுரியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com