திருவாரூா், அடியக்கமங்கலத்தில் நாளை மின்தடை
By DIN | Published On : 18th May 2023 11:18 PM | Last Updated : 18th May 2023 11:18 PM | அ+அ அ- |

திருவாரூா், அடியக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என திருவாரூா் மின்வாரிய இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் துணை மின் நிலையம்: திருவாரூா் நகா், தெற்கு வீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூா், முகந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா்.
அடியக்கமங்கலம் துணை மின் நிலையம் :அடியக்கமங்கலம், இபி காலனி, சிதம்பர நகா், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூா், புதுப்பத்தூா், நீலப்பாடி, கீழ்வேளூா், கொரடாச்சேரி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...