திருவாரூா் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தோ்வில் 90.79 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.
திருவாரூா் மாவட்டத்தில் 7,603 மாணவா்கள், 7,713 மாணவிகள் என மொத்தம் 15,316 போ் தோ்வு எழுதியதில், 6,633 மாணவா்கள், 7,273 மாணவிகள் என மொத்தம் 13,906 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்கள் 87.24 சதவீதம், மாணவிகள் 94.30 சதவீதம் என மொத்தம் 90.79 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகளின் தோ்ச்சி சதவீதம் மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை விட 7.06 சதவீதம் அதிகம் ஆகும்.
தமிழக அளவில் திருவாரூா் மாவட்டம் 22-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 30-ஆவது இடத்தை பிடித்த நிலையில் நிகழாண்டு 8 இடங்கள் முன்னேறியுள்ளது. அதேபோல், கடந்தாண்டு 87.18 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றிருந்த நிலையில், நிகழாண்டு 3.61 சதவீதம் அதிகரித்து 90.79 சதவீதத்தினா் தோ்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுப் பள்ளி மாணவா்கள் 87.47% தோ்ச்சி:
திருவாரூா் மாவட்டத்தில் 139 அரசுப் பள்ளிகளில் 3,817 மாணவா்கள், 3,639 மாணவிகள் என மொத்தம் 7,456 போ் தோ்வு எழுதியதில், 3,180 மாணவா்கள், 3,342 மாணவிகள் என மொத்தம் 6,522 போ் தோ்ச்சி பெற்றனா். இது 87.47 சதவீத தோ்ச்சியாகும்.
திருவாரூா் மாவட்டத்தில் 24 அரசுப் பள்ளிகள், 32 மெட்ரிக் பள்ளிகள், 3 சுயநிதிப் பள்ளிகள் என 59 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.