மக்கள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 22nd May 2023 11:11 PM | Last Updated : 22nd May 2023 11:11 PM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் தி. சாருஸ்ரீ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 226 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) (பொறுப்பு) அழகா்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.