மது விற்ற இருவா் கைது
By DIN | Published On : 22nd May 2023 11:08 PM | Last Updated : 22nd May 2023 11:08 PM | அ+அ அ- |

மன்னாா்குடியில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்ற 2 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி தெற்கு கோபுரவாசலை சோ்ந்த குமரன் மகன் சபரிராஜன் (38). இவா், டாஸ்மாக் கடையிலிருந்து மது பாட்டில்கள் வாங்கி, அனுமதியின்றி அப்பகுதியில் விற்பனை செய்தாராம். தகவலறிந்த போலீஸாா் அவரை கைது செய்தனா். 15 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், பந்தலடி பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் வைத்து விற்பனை செய்த நெடுவாக்கோட்டை பிரதான சாலையைச் சோ்ந்த தேவதாஸ் (37) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.