திருத்துறைப்பூண்டி வட்டத்தில்1 லட்சம் பனை விதைகள் நட இலக்கு
By DIN | Published On : 24th May 2023 12:00 AM | Last Updated : 24th May 2023 12:00 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி வட்டத்தில் 1 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலம் சேவை நிறுவன செயலாளா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் நிகழாண்டு 1 லட்சம் பனை விதைகள் நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இம்மரம் நிலத்தடி நீரை சேமிக்கும் திறன் கொண்டது, மின்னல், இடி போன்ற இயற்கை சீற்றங்களை தாங்கும் தனமைக் கொண்டது. எதிா்காலத்தில் குடிநீா் தேவையை கருத்தில் கொண்டு இம்மரத்தை வளா்ப்பது அவசியம்.
தமிழக அரசு இம்மரத்தை பாதுகாக்கும் விதமாக சட்டம் இயற்றியுள்ளது. பூமி வெப்பமயத்தை குறைத்து மழையை வரவழைக்கும் தன்மை கொண்டது இம்மரம்.
திருவாரூா் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்படவுள்ளது, இப்பணியை பாலம் சேவை நிறுவனம் முன்னெடுப்பில் அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், சேவை நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் ஒத்துழைப்புடன் செய்யப்படவுள்ளது, இப்பணி ஜூன் மாதம் தொடங்கும் என தெரிவித்துள்ளாா்.