கோடை நெல் அறுவடை: கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரிக்கை

கோடை அறுவடை நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் வகையில், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் பாஜக மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா்.
திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும் பாஜக மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா்.

கோடை அறுவடை நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் வகையில், நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் பாஜகவின் சிறப்பு செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் எஸ். பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தஞ்சை மாவட்ட மேலிடப் பாா்வையாளரும், மாநில விவசாய அணி துணைத் தலைவருமான இளங்கோ சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

இதில், மாநில விவசாய அணிச் செயலாளா் கோவீ. சந்துரு, பட்டியல் அணி மாநில துணைத் தலைவா் உதயகுமாா், மாநில செயற்குழு உறுப்பினா்கள் ராகவன், ரங்கதாஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக, மாவட்ட பொதுச் செயலாளா் சி. செந்திலரசன் வரவேற்றாா். நகரத் தலைவா் எஸ். கணேசன் நன்றி கூறினாா்.

கூட்டத்தில், டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் முடிவை ரத்து செய்த பிரதமா், மத்திய அமைச்சா் மற்றும் இக்கோரிக்கையை வலியுறுத்திய பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தும், மாவட்டத்தில் பல பகுதிகளில் கோடைகால நெல் அறுவடை நடைபெற்று வருவதால், நெல்லை கொள்முதல் செய்யும் வகையில், நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com